Tamil Chat Room

Create a Meebo Chat Room

வீடியோ பாடல்கள்



சினிமா விமர்சனம்

கள்ளக் காதல் கதை: நடிகை அனகாவுக்கு கொலை மிரட்டல்




சென்னை: சிந்து சமவெளி படத்தில் மாமனாருடன் கள்ளக் காதலில் ஈடுபடும் மருமகள் கேரக்டரில் நடித்த அனகாவுக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது.

நாடோடிகள், கோரிப்பாளையம் ஆகிய படங்களை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள படம் சிந்து சமவெளி. மாமனார், மருமகள் இடையிலான கள்ளக் காதலை மையமாகக் கொண்ட விவகாரமான இந்தப் படத்தை சாமி இயக்கியுள்ளார்.

இதையடுத்து சாமிக்கும் தயாரிப்பாளருக்கும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்தன. இந் நிலையில் நேற்று முன் தினம் இரவு சாமியின் சென்னை வீட்டின் மீது தாக்குதல் நடந்தது. அவரது கார் உடைத்து நொறுக்கப்பட்டது.

இந் நிலையி்ல் இந்தப் படத்தில் மருமகளாக நடித்த அனகாவுக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது.

அவர் கூறுகையி்ல், எனக்கு பலரிடமிருந்தும் தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்ப்பதற்காக, சென்னையில் உள்ள மினி உதயம் தியேட்டருக்கு சென்று இருந்தேன். அப்போது சில பெண்கள் என்னை திட்டினார்கள்.

மேலும் கடந்த 2 நாட்களாக, போனிலும் மிரட்டல்கள் வருகின்றன. தமிழ் கலாசாரத்தை கொச்சைப்படுத்தும் வகையில் மாமனார்-மருமகள் இடையே கள்ள உறவு இருப்பது போன்ற கதையில் நடித்த உன்னை தீர்த்துக்கட்டி விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்.

நான் ஒரு நடிகை. டைரக்டர் எப்படி நடிக்க சொல்கிறாரோ, அப்படி நடிக்கிறேன். மாமனார்-மருமகள் இடையே உறவு இருப்பது போல் கதை அமைந்திருந்தாலும், அந்த உறவினால் ஒரு குடும்பமே அழிந்து போவது போலத் தான் படத்தில் காட்டியிருக்கிறார்கள் என்றார்.

இவருக்கு உண்மையிலேயே மிரட்டல் வந்ததா அல்லது இது படத்தை ஓட வைக்க நடத்தப்படும் 'பப்ளிசிட்டி ஸ்டண்டா' என்று தெரியவில்லை.

அமலா பால் என்ற பெயரில் வீரசேகரன் படத்தில் அறிமுகமானவர் தான் இந்தப் படத்தில் தனது பெயரை அனகா என்று மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


சிந்து சமவெளி... ஏ சான்றும், ஏக பாராட்டும்!

சிந்து சமவெளி படத்தைப் பார்த்த சென்னை மண்டல சென்சார் சிறிய தணிக்கைக்குப் பிறகு ஏ சான்றிதழ் அளித்தனர். ஆனால் படத்தை வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.

தமிழ் பட உலகில், சர்ச்சைக்குரிய கதைகளை தேர்ந்தெடுத்து இயக்குபவர் என்ற பெயரை குறுகிய காலத்தில் சம்பாதித்து விட்டவர் சாமி. பாலீஷ் வார்த்தைகளால் பேசத் தெரியாத படைப்பாளியான இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கினாலும், சரக்கிருப்பதால் இன்னமும் கோடம்பாக்கத்தில் மதிக்கப்படுகிறார்.

இவர் இயக்கிய முதல் படம் , 'உயிர்.' கொழுந்தன் மீது ஆசைப்படும் (கணவன் கையாலாகாதவன் என்பதால்) அண்ணியை பற்றிய கதை. அடுத்து இவர் இயக்கிய 'மிருகம்', ஊருக்கு அடங்காத ஒருவன், உயிர் கொல்லி நோய் வந்து சாகிற கதை. இந்தப் படம் வன்முறையை சற்று அதிகமாக தூக்கிப் பிடிப்பது போலத் தெரிந்தாலும், எய்ட்ஸை மையப்படுத்தி வந்த ஒரே படம் என்ற பெருமையைப் பெற்றது.

இதைத்தொடர்ந்து சாமி இயக்கியுள்ள புதிய படம் சிந்து சமவெளி.

இது, கள்ள உறவால் ஏற்படும் விபரீத விளைவுகளை சித்தரிக்கும் படம். ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாகவும், அனகா கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள்.

இந்த படம், தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், 3 காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு, படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கினார்கள்.

அதே நேரம், தினசரி செய்தித்தாள்களைத் திறந்தால் வரும் கள்ளக் காதல் செய்திகல் இந்தப் படத்தால் கொஞ்சமாவது குறையும் என்று நம்புவதாக பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

ரஜினி மகள் சவுந்தர்யா திருமணம் வீடியோ

நடி‌க‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌‌தி‌ன் மக‌ள் செள‌ந்த‌ர்யா-அஷ்வி‌ன் ரா‌ம்குமா‌ர் ‌திருமண‌ம் சென்னை ராணி மெய்யம்மை ஹாலில் இன்று நடைபெற்றது. அ‌ங்‌கு குழு‌மி‌யிரு‌ந்த உற‌வின‌ர்க‌ள், மு‌க்‌கிய ‌பிரமுக‌ர்‌க‌ள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் அ‌ர்‌ச்சதை தூ‌வி மணம‌க்களை வா‌ழ்‌த்‌தின‌ர்.

















































விளையாட்டு

ஆசிய கோப்பையில் சூதாட்டமா? சல்மான் பட், அக்மலிடம் செல்போன் ஆதாரங்களை கேட்கிறது ஐ.சி.சி.

லண்டன், செப்.7: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சந்தேகித்துள்ளது.

இதனால் பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், கம்ரான் அக்மல் ஆகியோரின் செல்போன் ஆதாரங்களை ஐ.சி.சி. கேட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் வீரர்கள் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியிலும் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக ஐ.சி.சி. சந்தேகித்துள்ளது.

ஆசிய கோப்பையின்போது சல்மான் பட், கம்ரான் அக்மல் ஆகியோர் யாரிடம் எல்லாம் செல்போனில் பேசினார்கள் என்பது குறித்த விவரங்களை அறிய அவர்களின் செல்போன் ஆதாரங்களை ஐசிசியின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கேட்டுள்ளது. இதற்கு இரு வீரர்களும் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

முழு விசாரணை முடிந்த பிறகே இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள வீரர்கள் குறித்து முடிவு செய்யப்படும். சூதாட்ட புகார் தொடர்பான ஆதாரங்களை அளித்தால் விட்டுவிடுவதாக முகமது ஆமிரிடம் விசாரணை அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அந்த பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை போட்டியின் லீக் ஆட்டங்களில் இந்தியா மற்றும் இலங்கையிடம் தோல்வியடைந்து பாகிஸ்தான் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.


ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டமா? தெரியாது என்கிறது கிரிக்கெட் வாரியம்

புதுதில்லி, செப்.7: ஐபிஎல் போட்டிகளில் தவறுகள் நடப்பது தொடர்பாக எந்தவித தகவலும் எங்களுக்கு வரவில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ செய்தித் தொடர்பாளர் ராஜீவ் சுக்லா கூறியதாவது: ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம் போன்ற தவறுகள் நடப்பதாக "தி ஆஸ்திரேலியன்' என்ற பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முன்னணி பேட்ஸ்மேன் ஒருவர் சந்தேகம் எழுப்பும் வகையில் விளையாடினார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு சூதாட்டம் நடப்பதாக எங்களுக்கு எந்தவிதத் தகவலும் வரவில்லை. அதுபோன்று சூதாட்டம் ஐபிஎல் போட்டிகளின்போது நடக்கவில்லை. ஐசிசி விதிகள் எதையும் நாங்கள் மீறவில்லை. மேலும் ஐபிஎல் விதிமுறைகளையும் தவறாது அமல்படுத்தினோம். ஒவ்வொரு வீரரும் கண்காணிப்பில் இருந்தனர். அப்படி ஏதாவது தவறு நடந்து இருந்தால் ஐசிசியின் ஊவல் தடுப்பு மற்றும பாதுகாப்புப் பிரிவு அதை விசாரிக்கும் என்றார் அவர். இதேபோல இந்தச் செய்திகளை ஐபிஎல் இடைக்காலத் தலைவர் சிரயு அமீனும் மறுத்துள்ளார்.


யு.எஸ். ஓபன் காலிறுதியில் பெடரர், சோடர்லிங், வோஸ்னியாக்கி


நியூயார்க், செப்.7: அமெரிக்காவில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்வீடனின் ராபின் சோடர்லிங், டென்மார்க்கின் கரோலினா வோஸ்னியாக்கி ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

திங்கள்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிக் 6-3, 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் மார்டி பிஸ்ûஸ வீழ்த்தினார். ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6-3, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் ஜுர்கன் மெல்ஸரைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். ஸ்வீடனின் ராபின் சோடர்லிங் 6-4, 6-2, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ஆல்பர்ட்டை வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

மகளிர் பிரிவு: மகளிர் ஒற்றையர் 4-வது சுற்றில் டென்மார்க்கின் கரோலினா வோஸ்னியாக்கி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் மரிய ஷரபோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

ஸ்லோவேகியாவின் டொமினிகா 7-5, 7-6 என்ற செட் கணக்கில் ரஷியாவின் ஸ்வெட்லானாவை தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றார். ரஷியாவின் வேரா ஸ்வோனரேவா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஆண்ட்ரியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

இரட்டையர் பிரிவு: ஆடவர் இரட்டையர் மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் பாப் பிரையன்-மைக் பிரையன் சகோதரர்கள் ஜோடி 7-5, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மார்டி பிஷ்-பாமாஸின் மார்க் ஜோடியை வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

ஆர்ஜென்டீனாவின் எட்வர்டு-செபல்லோஸ் ஜோடி 7-6, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வீடனின் ராபர்ட்-ருமேனியாவின் டீக்கா ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது.

மகளிர் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவின் துல்கோ-இத்தாலியின் பென்னட்டா ஜோடி 6-7, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் மோனிகா- இஸ்ரேலின் ஷாகர்பீர் ஜோடியை வென்று காலிறுதிக்குள் நுழைந்தது.

ஜிம்பாப்வேயின் காரா பிளாக்-ஆஸ்திரேலியாவின் அனாஸ்டாஸியா ஜோடி 2-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜ்-அன்ன லீனா ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. சீன தைபேவின் யங்-ஜான்-சீனாவின் ஜி செங் ஜோடி 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்லோவேகியாவின் போலானா-குரேஷியாவின் பெட்ரா ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது.

கலப்பு இரட்டையர் பிரிவு: கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஜிம்பாப்வேவின் காராபிளாக் ஜோடி 3-6, 4-6 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் அன்னலீனா-பாமாஸின் மார்க் ஜோடியிடம் தோல்வியைத் தழுவி போட்டியிலிருந்து வெளியேறியது.

சினிமா செய்திகள்

நடிகர் முரளி மரணம்-மாரடைப்பால் உயிர் பிரிந்தது

பிரபல திரைப்பட நடிகர் முரளி திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். நேற்று இரவு முரளிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக்கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை முரளி உயிரிழந்தார்.

1984ம் ஆண்டு கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில், அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் முரளி. கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய வெற்றி நாயகர்கள் வரிசையில் இணைந்த குறிப்பிடத்தக்க நடிகர் முரளி.
முதல் படமே சூப்பர்ஹிட் ஆனதால் வெற்றிப் பட நாயகனாக உருவெடுத்தார். தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்தார். காதல் படங்களுக்குத் தனி இலக்கணம் வகுத்தவை முரளி நடித்த படங்கள்.

பகல் நிலவு, இதயம், அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, சொன்னால்தான் காதலா, இரணியன், சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் அவர் நடித்துள்ளார்.

சாதனை படைத்த இதயம்:

முரளியின் நடிப்பில் வெளியான புது வசந்தம், இதயம் ஆகிய படங்களில் மிகப் பெரிய வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் படங்களாகும். பாணா காத்தாடி தவிர தனது படங்கள் அனைத்திலும் ஹீரோவாகவே நடித்த பெருமைக்குரியவர் முரளி. முரளியின் தந்தை கன்னடர் என்றாலும், அவரது தாய் ஒரு தமிழ்ப் பெண். இதனால் பிறந்தது பெங்களூர் என்றாலும் சுத்தத் தமிழராக இருந்தவர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களின்போது கன்னட திரையுலகின் எதிர்ப்பையும் மீறி கலந்து கொண்டு தனது உணர்வைப் பதிவு செய்தார்.

அவரது மகன் அதர்வாவை சமீபத்தில் ஹீரோவாக்கி அழகு பார்த்தார் முரளி. அவர் ஹீராவோக நடித்த முதல் படமான பாணா காத்தாடியில் முரளியும் சிறிய ரோலில் நடித்திருந்தார். மகன் நடித்த முதல் படமே முரளியின் கடைசிப் படமாக அமைந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முரளிக்கு வயது 47 ஆகிறது. முரளியின் திருமணம் காதல் திருமணமாகும். அவரது மனைவி பெயர் ஷோபா.

முரளியின் மறைவு செய்தி கேட்டு தமிழ் திரைப்பட உலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. முரளியின் மறைவிற்கு தமிழ் முன்னணி நடிகர்களும், நடிகைகளும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.